சருவும்படி
Saruvumpadi
Author: அருணகிரிநாதர் / Arunagirinathar
Venue: திருப்பரங்குன்றம்
Chanda: தனதந்தன தந்தன தந்தன
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலியும் சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகிச்
சயிலங்கொளும் அன்றல் பொருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றி எழுந்திட திறமாவே
இரவும்பகல் அந்தியும் நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி
இவனெஞ்சு பதன் பதன் என்றிட
மயல்கொண்டு வருந்திய வஞ்சகன்
இனியுன்றன் மலர்ந்தில கும்பதம் அடைவேனோ
திருவொன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின் தயிருண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநிறம்புனை
வேல் மிஞ்சுதிறங்கொள வென்றடல்
செயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள் முருகோனே
மதியுங்கதிரும் புயலும் தினம்
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்தருள் பெருமாளே.
Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.