ஸ்கந்த குரு கவசம்
Skanda Guru Kavasam
Attributed author in the uploaded source: ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
Publication boundary: This page contains only the manually checked opening invocation and lines 1–20 from the uploaded compilation. It is not presented as the complete work.
Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.
விநாயகர் வாழ்த்து
வரிகள் 1–5
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
விநாயகர் வாழ்த்து — தொடர்ச்சி
வரிகள் 6–8
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.
செய்யுள் — சரணம்
வரிகள் 9–10
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம்
செய்யுள் — குருநாதர் வேண்டுதல்
வரிகள் 11–15
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
செய்யுள் — அருள் வேண்டுதல்
வரிகள் 16–20
அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ