கனகந்திரள்
Kanakan Thiral
Author: அருணகிரிநாதர் / Arunagirinathar
Venue: திருப்பரங்குன்றம்
Chanda: தனதந்தன தந்தன தந்தன
கனகந்திரள் கின்ற பெருங்கிரி
தனில்வந்துத கன் தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே
கடமிஞ்சி அநந்த விதம்புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு
கரியின்றுணை என்று பிறந்திடு முருகோனே
பனகந்துயில் கின்ற திறம்புனை
கடல்முன் புக அடைந்த பரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே
பலதுன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலையன் கொலையன் புரி
பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே
அனகன் பெயர்நின்றுருளும் திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலும் தனகுந்திறல் கொண்டவர் புதல்வோனே
அடல்வந்து முழங்கியிடும் பறை
டுடுடுண் டுடு டுண் டுடு டுண் டென
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்மேல் தனில்வந்தருளுங்கன பெரியோனே
மதியுங்கதிரும் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்றுப் பரங்கிரி வந்தருள் பெருமாளே.
Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.